பிரதான செய்திகள்

தொழில்நுட்ப கல்லூரிகளில் பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

2019 ஆம் ஆண்டுக்கான நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடத்தப்படும் முழுநேர, பகுதி நேர பாடநெறிகளுக்கு தகைமையுடைய விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

20 பாடநெறிகளுக்கு தமிழ் – சிங்கள மொழி மூலம் இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரிகளிலிருந்து அவர்களின் தகைமைகளையும் திறமைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்கும் தெரிவு செய்யப்பட்டு, கற்கை நெறிக்காக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

A 4 தாளில் விண்ணப்படிவத்தை தயாரித்து 2018.12.03 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் சேர விரும்பும் தொழில்நுட்பக் கல்லூரி அல்லது தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளருக்கு அல்லது அதிபருக்குக் கிடைக்கக் கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பப்படுதல் வேண்டும்.

மேலதிக விபரங்கள் அறிய நவம்பர் மாதம் 02ஆம் திகதி வெளியான வர்த்தமானி பத்திரிகையைப் பார்க்கவும். அல்லது www.dtet.gov.lk என்ற இணையத்தளம் மூலமாக இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும், அத்தோடு, விண்ணப்பபடிவங்களை அவ்விணையத்தின் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும்.

Related posts

முன்னால் அமைச்சர் றிஷாட் மன்னார்-முசலிக்கான விஜயம் (படம்)

wpengine

கீத் ராத் 35 ஆவது இசை நிகழ்ச்சி

wpengine

பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலத்தை நீடித்து வர்த்தமானி வெளியீடு!

Editor