உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன்

வங்கிகளில் தான் பெற்ற கடன் தொகையை நூறு சதவிதம் திருப்பி செலுத்த தயார் என தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் தெரிவித்துள்ளார்.


தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் பிரித்தானியாவின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

இதுதொடர்பான வழக்கு தற்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மீண்டும் கடன் தொகையை முழுமையாக திருப்பி செலுத்த தயாராக இருப்பதாக மல்லையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘இந்நாட்டில் தொழிலில் தோல்வியடைந்தவர்களை தவறாக பேசுவதோ அல்லது குறைத்து எடைபோடவோ கூடாது.

பண மோசடி விவகாரத்தில் கௌரவமாக வெளியேறவோ அல்லது சிக்கலுக்கு தீர்வு காண வாய்ப்போ தர வேண்டும்.

நிதி அமைச்சர் தகவல் அறிக்கை அளித்துள்ளார். இந்த உணர்வில் எனது 100 சதவிதம் கடனை திருப்பி தரும் வாய்ப்பை ஏற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

நீண்ட காலம் போராடினேன். இனியும் போராடும் மனநிலை இல்லை.

wpengine

பெண் கிராம அலுவலரின் துணிச்சல் – சிக்கிய கசிப்பு உற்பத்தி நிலையம்!

Editor

அபிவிருத்தி பணியையும் அரசியல் காற்புணர்ச்சிக்கு அப்பால் நின்று முன்னெடுக்க வேண்டும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine