செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தையிட்டி விகாரையின் கீழ் பாரிய மனித புதைகுழி மறைக்கவே விகாரை அமைக்கப்பட்டுள்ளது .

காங்கேசன்துறை தையிட்டி விகாரையில் பாரிய மனித புதைகுழியினை மறைக்கவே விகாரை அமைக்கப்பட்டுள்ள்தாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைதீவிலும் அத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

“கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

எனவே விகாரையை அகற்றி அகழ்வினை மேற்கொண்டோ, நவீனமுறையில் ஸ்கேன் கருவிகள் மூலமோ ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய அரசாங்கம் முன்வரவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும்.

யுத்தம் மௌனிக்கப்பட்டபோது தமது உறவுகளை, குறிப்பாக கணவரை மனைவியும், மகன், மகளை பெற்றோரும் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலய முன்றலில் ஒப்படைத்தார்கள். தடுப்புமுகாம்கள், கடல் எனப் பல இடங்களிலும் சரணடைந்தார்கள்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிக்கும் நீதியைத்தாருங்கள். சிலவேளை நீங்கள் நீதியைத்தரும்போது, நீதிபதி சரவணராஜா போல்தான் உங்களுக்கும் நீதி கிடைக்குமோதெரியாது. ஆனால் இன்றைய அரசை நம்புவோம் இந்த விடயங்களுக்கு நீதிதாருங்கள் என்று கேட்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வழியுறுத்தி ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தம் ஆர்பாட்டம்.

wpengine

அமைச்சர் றிஷாட்டை விழ்த்த கூட்டமைப்புடன் ஒப்பந்தம்! ஹக்கீம் வெட்கம் இல்லையா?

wpengine

அகில இலங்கை சமாதான நீதவான் சத்தியப்பிரமாணம்

wpengine