பிரதான செய்திகள்விளையாட்டு

தேசிய ரீதியான போட்டியில் முசலி-ஜின்னா (அகத்திமுரிப்பு) 2ஆம் இடம் (படங்கள்)

(எஸ்.எச்.எம்.வாஜித்)

இளைளுர் சேவைகள் மன்றத்தின் ஊடாக வருடாந்தம் நடாத்தும் 18 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட இளைளுர்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டியின் தேசிய மட்ட விளையாட்டு போட்டியின் இறுதி நாள் விளையாட்டு நேற்று காலை குருனாகல் நகரில் நடைபெற்றது.

இறுதி போட்டியில் மாவட்டங்கள் ரீதியாக 26 அணிகள் கலந்து கொண்டன.

மன்னார் மாவட்டம் சார்பாக முசலி பிரதேசம் அகத்திமுரிப்பு கிராமத்தை சேர்ந்த ஜின்னா விளையாட்டு கழகம் கலந்து கொண்டதுடன், தேசிய ரீதியாக இண்டாம் இடத்தையும் பெற்றுகொண்டது என தேசிய இளைளுர் சேவை மன்றத்தின் மாகாண பணிப்பாளர் முனவ்வர்  (வன்னி) தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்;

மன்னார் மாவட்டத்தில் இது ஒரு சரித்தீரம் என்றும், 1977 ஆம் ஆண்டு தேசிய இளைளுர் சம்மேளனம் உருவாக்கபட்டதில் இருந்து இதுவரைக்கும் முதலாவது முறையாக அகில இலங்கை ரிதியாக இரண்டாம் இடத்தை பெற்றது இது தான் முதல் தடவையும்,வேறு எந்த பரிசில்களும்,சான்றிதழ்களும் கிடைக்கவில்லை என்றும் எமது பிரதேசம் யுத்ததினால் அழிந்து போனாலும் எங்களுடைய இளைளுர்களின் விளையாட்டு திறமைகள் மேலும் வளர்ந்துகொண்டு தான் வருகின்றது,எமது விரர்களை இன்னும் ஊக்கபடுத்தி எதிர்வரும் காலங்களில் எமது பிரதேச விரர்களை தேசிய ரீதியான சாதனையாளர்களாக மாற்றுவோம் என தெரிவித்தார்.

அத்துடன் இந்த விளையாட்டு விரர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்வதாகவும் தெரிவித்தார்.13307270_290480187958914_3295511863624963276_n13335629_290480047958928_5190333016860120612_n

Related posts

ரீசார்ஜ் செய்ய வந்த 17 வயது பெண் பலி

wpengine

Sinhala famous artist – singer Hema Sri De Alwis no house – Minister Sajth Pramadasa helping to construct a house

wpengine

வெட்கம், மானம் இருந்தால் மைத்திரிபால சிறிசேன தாமரை மொட்டில் போட்டியிடுவாரா

wpengine