(Abdul Kareem Misbahul Haq)
வணிக ரீதியான நோக்கம் கொண்டியங்கும் பேருந்தில் மக்கள் பயணிக்க வேண்டுமாக இருந்தால் அந்த பேருந்து எங்கே செல்லுமெனும் விடயம் தெளிவாக இருப்பதோடு அதற்கு குறித்த அரச அனுமதிகளும் இருக்க வேண்டும்.பேருந்து எங்கே செல்லுமெனும் விடயம் தெளிவற்று இருக்கும் போது அதில் பயணிகள் யாரும் பயணிக்க விரும்பமாட்டார்கள்.
ஒரு குறித்த பேருந்து எங்கே பயணிக்கப் போகிறதெனத் தெரியாமல் பயணிகள் அதில் பயணிப்பார்களாக இருந்தால் அந்த மக்களை யாரும் சாதூரியமானவர்களாக குறிப்பிடமாட்டார்கள்.இன்றுள்ள முஸ்லிம் கட்சிகளிடம் உங்களின் கொள்கைகள்,இலட்சியங்கள் என்ன? என்ற வினாவை எழுப்பினால் எக் கட்சியிடமிருந்தும் தெளிவான பதில்களைப் பெற முடியாது.அவர்கள் அவர்களது இஸ்டப்படி தங்களது கட்சியை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
மு.காவினர் மு.காவானது முஸ்லிம்களின் அத்தனை உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான கட்சியாகும்.அதற்கு மட்டிட்ட கொள்கைகள் இல்லை என்ற விதண்டாவாதக் கருத்துக்களை கூற முடியுமே தவிர இது தான் நாங்கள் சாதிக்க நினைக்கும் விடயங்களென கேட்போர் முகத்தில் அள்ளி வீசிட இயலாது.
தேர்தல் காலம் வந்தால் மாத்திரம் கரையோர மாவட்டத்தை அள்ளிப் பிடித்து கக்கத்தில் செருகிக்கொண்டு கிழக்கு பூராகவும் பம்மாத்துகாட்டும்.இது எந்தளவு நடைமுறைச் சாத்தியமானது என்பதைக் கூட சிறிதும் சிந்திக்காமல் முஸ்லிம்களும் உணர்சிகளுக்கு அடிமைப்பட்டு வாக்குகளை அள்ளி வீசுவர்.இறுதியில் எல்லாம் பூச்சியத்தால் பெருக்கிய கதையாகத் தான் முடிவடையும்.மக்கள் ஆதரவற்ற ஒரு கட்சியைப் பற்றி அதிகம் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
மு.காவிற்கு இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் அதன் ஒவ்வொரு எட்டுக்களும் மிகச் சிறப்பான நகர்வுகளாக அமைய வேண்டும்.மாறாக முஸ்லிம்களின் விடயத்தில் பொடு போக்காக செயற்படுவதை சிறிதேனும் ஏற்றுகொள்ள முடியாது.
மு.காவிற்கு வெளியில் சொல்லுமளவு கொள்கைகள் ஏதும் இல்லை என்பதை மேடை போட்டுக் வெளிப்படுத்திய ஒரு நிகழ்வுதான் கடந்த 19-03-2016ம் திகதி சனிக்கிழமை நடைபெற்று முடிந்த மு.காவின் தேசிய மாநாடாகும்.குறித்த மாநாடு மு.கா என்ற கட்சியின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதனால் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த இலாபம் என்ன என்ற வினாவினை எழுப்பினால் தான் அங்கே விடைகள் வந்த வழி தெரியாது ஓடி ஒழிக்கின்றன.மு.கா இத் தேசிய மாநாட்டை மிக அதிகமான கோடிகளோடு நடாத்தி முடித்திருந்தது.குறித்த மாநாடு நடைபெற்றதற்கு மூன்று மாதங்கள் முன்பே இதற்கான முன்னெடுப்புக்களை மு.கா முடுக்கிவிட்டிருந்தது.ஒரு மாதத்திற்கு முன்பே குறித்த மாநாடு நடைபெற்ற மைதானத்தில் பிரமாண்டமான பார்வையாளர் கூடாரங்களை நிறுவி பம்மாத்து அரசியல் செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.
மு.கா இத் தேசிய மாநாட்டிற்கு காட்டிய அக்கறையின் ஒரு சிறு பகுதியேனும் சமூக விடயங்களில் காட்டி இருந்தால் இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்ற ஒன்றே இருந்திருக்காது.செலவுக்கேற்ற பயன்கள் இருப்பின் பம்மாத்து விடயங்களை பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.குறித்த மாநாட்டில் கொள்கை ரீதியான விடயங்களில் தான் சமூகம் பயனடைய வாய்ப்புள்ளது.கொள்கை என்றால் எந்தக் கடையில் கிடைக்கும் என்பது போன்றே மு.காவினர் இத் தேசிய மாநாட்டை நடாத்தி முடித்திருந்தார்கள்.
இம் மாநாடு நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து இவைகளையாவது குறித்த மாநாட்டின் தீர்மானங்களாக பிரகடனப்படுத்துங்கள் என மு.காவினரின் காலில் விழாத குறையாக அவ் அறிக்கையில் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.இவரின் அறிக்கையை ஒரு பொருட்டாக கூட