அரசியல்பிரதான செய்திகள்

தேசிய மக்கள் சக்தி பதவி விலகி, மீண்டும் பொது ஜன பெரமுனவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி அரசு பதவி விலகி, மீண்டும் பொது ஜன பெரமுனவுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் தானும் அமைதியாக இருந்தபோதிலும், நாமல் ராஜபக்ஷவுடன் கிராம் கிராமமாக சென்று செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் எதிர்கால தலைவர் நாமல் ராஜபக்ஷ என தாம் நம்புவதாகவும், மகிந்த ராஜபக்ஷ அணியின் அடுத்த தலைமையாக அவருடன் இணைந்து பயணிக்கத் தயாராக இருப்பதாகவும் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததை தொடர்ந்து நாடு பின்னடைவை சந்தித்ததாகவும், அவர்களை திருடர்கள் என போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அரசை வீழ்த்துவதற்கு முன்பு, அவர்கள் ராஜினாமா செய்து, மீண்டும் பொது ஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை வழிநடத்த சிறந்த அனுபவம் கொண்ட குழு தேவை எனவும் அதற்கு தாங்கள்தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்திற்கு தலைமை தாங்கவும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தி, அரசியல் பழிவாங்கல்களை தடுக்க தம்மால் முடியும் எனவும் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

காதல் விவகாரம்! 20வயது பெண் தற்கொலை

wpengine

பெண் வேடமிட்டு சங்கிலி பறிக்கும் கும்பல் – 2 பெண் உட்பட 4 பேர் கைது .

Maash

அமைச்சர் ஹக்கீம் என் மீது அபாண்டங்களை சுமத்துகின்றார்! நான் சவால் விடுகின்றேன் -அமைச்சர் றிஷாட்

wpengine