பிரதான செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின்புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் பைசாலின் வாகனம் விபத்து, ஒருவர் பலி .!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசாலின் வாகனம் விபத்து.. ஒருவர் பலி ..

வாகன விபத்து தொடர்பில் தேசிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (14) காலை கொஸ்வத்த, ஹல்ததுவன பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது காரின் சாரதியாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கொஸ்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள்! 20 பயனாளர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு.

Maash

மஹிந்த அணியில் பிரபல கிரிக்கெட் வீரர்

wpengine

சமூக வலைத்தளம் ஊடான பதிவு பதற்ற நிலைக்கு காரணம்

wpengine