தேசிய கொள்கையொன்றை உருவாக்குமாறு கோரி சத்தியாகிரகப் போராட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை பாதாளத்தில் இருந்து மீட்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்த சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படுவதாக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கட்சி பேதமின்றி வெள்ளை ஆடை அணிந்து கலந்துகொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தேசிய கொள்கையொன்றை உருவாக்குமாறு கோரியே இந்த சத்தியாகிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares