தேசிய அரசுமில்லை,புதிய பிரதமருமில்லை கோத்தா உறுதி

“எமது அரசு தொடர்ந்தும் பயணிக்கும் எனவும் தேசிய அரசு அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை, பிரதமரை மாற்றும் யோசனையும் எமக்கு இல்லை  சிலரால் திட்டமிட்டு வெளியிடப்படும் வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“கடந்த நல்லாட்சி அரசால், தேசிய அரசால் தான் நாடு இந்தளவு நெருக்கடியை சந்தித்துள்ளது. 

இந்நிலையில், மீண்டுமொரு தேசிய அரசு எதற்கு? எமது அரசு பெரும்பான்மைப் பலத்துடன் இன்னமும் இருக்கின்றது.

அரசைக் கவிழ்க்கச் சதி செய்வோர் தொடர்பில் நாம் கவனம் எடுத்துள்ளோம். அவர்களின் கனவு ஒருபோதும் நனவாகாது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை விரைவில் முடிவுக்கு வரும்” எனவும் தெரிவித்துள்ளார்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares