பிரதான செய்திகள்

தேசிய அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுக்க புதிய அமைச்சர்கள் தேவை! பைஸர் முஸ்தபா

தேசிய அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுத்துச்செல்ல அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியது அவசியம் என உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், கட்சிகள் உடைக்கும் நோக்கில் அமைச்சு பதவிகளை வழங்கியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் தற்போதைய அரசாங்கம் கட்சிக்குள்ளேயே பதவிகளை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அமைச்சுப்பதவிகளின் எண்ணிக்கையை நாடாளுமன்றமே தீர்மானிக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எல்லை நிர்ணயம் முடியாமல் உள்ளுராட்சி தேர்தலை நடத்த முடியாது என அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்கவும்!

wpengine

அமைச்சர் டக்ளஸ்சின் கவனத்திற்கு மன்னார்-கொக்குபடையான் மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

உங்களிடமிருந்து விடைபெற நான் விரும்பவில்லை

wpengine