பிரதான செய்திகள்

தேசிய அடையாள அட்டை வினியோகம் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக பெரும்பாலானோர் வருகை தருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இதற்கு முன்னர் நாளாந்தம் 1600 தேசிய அடையாள அட்டைகளே விநியோகிக்கப்பட்டன எனினும் தற்பொழுது 2000 தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.

நாட்டில் தற்பொழுது நிலவும் பாதுகாப்பு நிலைமையை அடுத்து தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் 800 க்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளை கடந்த வாரத்தில் விநியோகிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

500 மில்லியன் ரூபா இழப்பீடு – அர்ச்சுனா எம்பிக்கு வந்த அடுத்த சோதனை .

Maash

மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பேஸ்புக் தடை ஜனாதிபதி

wpengine

அதிபரின் அடாவடி தனம் தமிழ் பாட ஆசிரியை தற்கொலை

wpengine