பிரதான செய்திகள்

தேசிய அடையாள அட்டையில் மாற்றம்

தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று முதல் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சர்வதேச தரத்திலான புகைப்படங்களை தங்கள் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.

குறித்த புகைப்படங்களை எடுப்பதற்காக நாடு முழுவதும் 1700 புகைப்பட்ட நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் என்ன என்பது தொடர்பில் பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த புகைப்பட நிலையங்களுக்கு தங்கள் முத்திரையுடனாக பதிவு சான்றிதழ் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

Related posts

கடற்கரையோர பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மன்னாரில்

wpengine

பிள்ளை பெற்ற 13வயது மாணவி மரணம்! காதலன் நீதி மன்றத்தில்

wpengine

வட கொரியாவுக்கு ஐ.நா தடை

wpengine