தெற்கு ஊடகவியலாளா்கள் – முதலமைச்சா் விக்னேஸ்வரன் சந்திப்பு

(அஷ்ரப் ஏ சமத்)
தெற்கு ஊடகவியாலாளா்கள் கடந்த சனி,ஞாயிறுகளில் வடக்கு ஊடக இணைப்பு பாலத்தை ஏற்படுத்துவதற்காக சென்றனா். அங்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு வடக்கு மாகாண பிரதம அமைச்சா் விக்னேஸவரனை சந்தித்தனா். இச் சந்திப்பில் ஊடக அமைச்சா் கயந்த கருநாதிலக்க பிரதியமைசச்சா் மற்றும் தெற்கு ஊடகவியலாளா்களும் சந்தித்து கலந்துரையாடினாா்.

இச் சந்திப்பில் வடக்கில் காணாமல் போன 41 ஊடகவியலாளா்கள் நினைவாக யாழ் சுதந்திர ஊடகவியலாளா்கள் நினைவுத் துாபி ஒன்றை  யாழ் நகரில் நிர்மாணிக்கப்பட்டு அதில் ஊடக அமைச்சா் முதலமைச்சா் மற்றும் ஊடகவியலாளா்கள் கையெழுத்திட்டனா்.  இவா்கள் பற்றி ஜனாதிபதி கமிசன் அமைத்து அவா்கள் காணமல் போகி உள்ளனா்.

SAMSUNG CSC

சிலா் கொலைசெய்யப்பட்டுள்ளனா். இவை பற்றி விரிவான விசாரணை  மேற்கொண்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு தண்டனை மற்றும் காணமல்  போன ஊடகவியலாளா்களுக்க நிவாரணம், பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சா் ஊடக அமைச்சரை வேண்டிக் கொண்டாா். அத்துடன் வடக்கில் உள்ள நிலவரங்களை தெற்கில் உள்ள ஊடகங்கள் ஒரு நல்லிணக்கமாக பெரும்பாண்மை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களது  பிரச்சினைகள் நியாயமான முறையில் வெளிக்கொணரப்படல் வேண்டும். அத்துடன் இன்னும் தெற்கில் இருந்து வரும் சகல கடிதங்களும் சிங்களத்திலேயே தனக்கு வருகின்றது. தற்பொழுது கூட வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் நான் எழுதிய ஆங்கில மொழி மூல கடிதத்திற்கு சிங்களத்திலேயே பதில் அனுப்பப்படுகின்றது. ஆகக் குறைந்து தனக்கு தெரந்து கொள்ள ஆங்கிலத்தில் எழுதினாலும் அதனை உடன் தெரிந்து கொள்ளலாம்.  இதனால் பல பிரச்சினைகள் எழுகின்றன.
 வடக்கு பாதுகாப்பு கட்டளைத் தளபதி தங்களது சந்திப்பில் தமிழ் மொழிமூலம் தொடா்புபடுத்தக் கூறிய அதிகாரிகளை நியமிப்பதாக சொல்லியுள்ளனா் என ஊடக அமைச்சா் இங்கு முதலமைச்சாிடம்  தெரிவித்துள்ளாா்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares