அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் மற்றும் விவசாய பீடங்களை ஆரம்பியுங்கள்- அஷ்ரப் தாஹிர் MP

லுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மிக நீண்ட நாள் தேவையாகவும் கோரிக்கையாகவும் இருந்து வருகின்ற மருத்துவ பீடமொன்றினை அமைப்பதற்காக ஒவ்வொரு அரசாங்கத்திடமும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தாலும் இது வரை எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடவில்லையெனவும் இந்த அரசாங்கமாவது இது விடயம் குறித்து கவனமெடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வியாழக்கிழமை (20) பாராளுமன்றில் தெரிவித்தார்.

இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்ட வாசிப்பின் மீதான விவாதங்களின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார், குறித்த வரவு செலவு திட்டத்தில் மிக குறைந்தளவிலான ஒதுக்கீடுகளே கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் அதிக தேவைகளை கொண்ட மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்படுவதாகவும் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டிப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உரையாற்றுகையில், தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் பிரதேசமானது விவசாயத்திற்கு பெயர் போன பிரதேசமாக காணப்படுவதனால் இப்பல்கலைக்கழகத்திற்கு விவசாய பீடமொன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தின் தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் அதிக ஒதுக்கீடுகளை செய்து தருமாறும் கேட்டுக் கொண்டார்.

Related posts

37 இராஜாங்க அமைச்சர்களுக்கு எரிபொருள்,வாகனம் தொடர்பான புதிய பிரச்சினை

wpengine

அவதானம்! அரச நிறுவன சின்னங்களைப் பயன்படுத்தி வேலை தருவதாக தரவு சேகரிப்பு மற்றும் பண மோசடி.

Maash

இன்று தொழிலாளர் தினம்

wpengine