பிரதான செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிறுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் 331 மாணவர்கள் நேற்று (27) இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உப வேந்தரும், விரிவுரையாளரமான எம்.எம்.எம். நஜீம் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களுக்கு மேற்கொண்ட பகுடிவதை காரணமாக இடைநிறுத்தம் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய மாணவர்களை பகுடிவதை செய்யக்கூடாது என்ற பல்கலைக்கழகத்தின்  முடிவை பல்கலைக்கழகத்தின் 5 பீடங்களில் 4 பீட மாணவர்கள் ஏற்றுக்கொண்டபோதும் முகாமைத்துவ பீட மாணவர்கள் மாத்திரம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

புதிய மாணவர்ளை பகுடிவதைக்கு உட்படுத்துவது தொடர்பில் முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ள நிலையிலேயே பல்கலைக்கழகத்தில் பகுடிவதை மேற்கொள்ளக்கூடாதென பல்கலைக்கழகம் அறிவுறுத்தியதெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த இடைநிறுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுளைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

மன்னார் தொடக்கம் திருகோணமலை வரை கடற்கொந்தளிப்பு

wpengine

800க்கும் அதிகமான வீடுகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது!

wpengine

தேர்தல் தொடர்பான சுகாதார ஒழங்கு வீதிகள்

wpengine