பிரதான செய்திகள்

தூக்கில் தொங்கிய வவுனியா பாடசாலை மாணவி

வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா வேப்பங்குளம் 95/34C விலாசத்தில் வசித்து வந்த விபுலாந்தா கல்லூரியில் தரம் 11இல் கல்வி கற்று வந்த விஜயகுமார் நிலுக்சனா என்கின்ற (16 வயது) மாணவியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார்
குறித்த மாணவியின் பெற்றோர்கள் அரச உத்தியோகத்தர்கள் என்பதினால் இருவரும் பணிக்கு சென்றிருந்த வேளை மாணவி வீட்டில் தனியாகவே இருந்துள்ளார்.

மாலை 4.40 மணியளவில் இருவரும் வீடு திரும்பிய வேலை வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட மகளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

எனினும், குறித்த மாணவி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

மேலும், இன்று அதிகாலை வவுனியா கற்குழியை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் ஒருவனும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் பெற்றோல் தாக்குதல்! வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் விஜயம்

wpengine

மனோவின் 20 வருடகாலமாக அரசியலில் மலையக மக்களை மீண்டும் ஏமாற்ற இந்த நாகடகமா?

wpengine

வாகன எரிபொருள் திறன் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை மறுத்தது லங்கா IOC

Editor