பிரதான செய்திகள்

துளைக்காத கார் தேவையில்லை! இறைவன் பாதுகாப்பளிப்பான்.

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் இந்த வாரம் அதாவது மே ஐந்தாம் திகதி முதல் தேவாலயங்களில் ஞாயிறு ஆதாரனைகள் ஆரம்பமாகவுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்த ஆராதனைகளை நடத்தவுள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் விசாரணை முன்னெடுப்புக்களை அவதானித்த பின்னரே, நாளாந்த ஆராதனைகளை நடத்துவது பற்றி யோசிக்கவுள்ளதாகவும் அவர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமக்கு அரசாங்கம், குண்டு துளைக்காத காரை வழங்கியுள்ளது. எனினும் அதனை தாம் பயன்படுத்தப்போவதில்லை.

தமக்கு இறைவன் பாதுகாப்பளிப்பான். தம்மை பொறுத்தவரை, பொதுமக்களின் பாதுகாப்பே அவசியம் என்றும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெடிக்கும் ஐபோன் 7

wpengine

சு.க.வின் பிளவுக்குக் காரணம் பிரதமரா?

wpengine

பொதுபல சேனாவின் முக்கியஸ்தரை பதவி நீக்க வேண்டும்! வட்டரக்க

wpengine