பிரதான செய்திகள்

துறைமுக நகர ஆணைக்குழு சம்பந்தமாக சட்டமூலம் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவை

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சம்பந்தமான சட்டமூலத்தை அடுத்த வாரம் ஒரே தினத்தில் விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

துறைமுக நகர ஆணைக்குழு சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கின் தீர்ப்பு என்ன என்பது குறித்து நீதிமன்றம் இன்னும் சபாநாயகருக்கு அறிவிக்கவில்லை. இவ்வாறான நிலைமையில், எதிர்வரும் புதன்கிழமை சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நடத்த அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளது.

நீதிமன்றம் இன்னும் தீர்ப்பை வழங்காததாலும் பாரதூரமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாலும் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை இரண்டு நாட்களாவது நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது.

எனினும் 4 ஆம் திகதி தீர்ப்பு கிடைத்து விடும் எனவும் 5 ஆம் திகதி கட்டாயம் விவாதத்தை நடத்தி சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆளும் கட்சி தொடர்ந்தும் கூறியது.

எமது எதிர்ப்புக்கு மத்தியிலும் எதிர்வரும் 5 ஆம் திகதி துறைமுக நகரம் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எனது ஊகத்தை உறுதி செய்த முதலமைச்சர்

wpengine

இரண்டு வாரங்களில் முக்கிய அமைச்சர் கைது செய்யப்படலாம்.

wpengine

ரணிலின் திட்டத்தை ரத்துசெய்த மைத்திரி! பிரயோசனமில்லை

wpengine