உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

துருக்கி எர்டோகனின் அதிரடி நடவடிக்கை

துருக்கி நாட்டில் அதிபர் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றனர். எனினும் அதிபருக்கு ஆதரவாக மக்கள் திரண்டு அதை முறியடித்தனர். இந்த புரட்சி முயற்சிக்கு பின்னணியாக செயல்பட்டவர் அமெரிக்காவில் வசிக்கும் துருக்கிய மத போதகரான பெதுல்லா குலென் என்று துருக்கி அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இதைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ராணுவத்தினர்,பொலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், வக்கீல்கள் ஆகியோரை அதிபர் எர்டோகன் அரசு தீவிரமாக வேட்டையாடி வருகிறது. இதுவரை 35 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 11,567 பேர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

இந்த நிலையில் இஸ்தான்புல் நகரில் உள்ள 3 முக்கிய கோர்ட்டுகளில் துருக்கி பொலீசார் நேற்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். 173 அரசு வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்களை கைது செய்வதற்கான வாரண்டுகளுடனும் அவர்கள் சென்றனர். தீவிர விசாரணைக்கு பின்னர், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி பலரை கைதும் செய்தனர். எனினும் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை.

Related posts

வன்னியில் மூக்குடைபட்ட ஹக்கீம் மற்றும் ஹுனைஸ் பாருக்

wpengine

மின்னஞ்சல் மூலம் மேற்கொள்ளப்படும் நிதிமோசடி தொடர்பில் முறைப்பாடுகள்

wpengine

கோட்டாவுக்கு வாக்களித்த மக்கள் எதிர் வரும் பொதுத் தேர்தலில் மாற்றம் செய்ய வேண்டும்

wpengine