பிரதான செய்திகள்

தீவிரவாத செயற்பாடுகளுக்கு மரண தண்டனை

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பதனை சட்டமாக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தனி நபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இந்த தனி நபர் பிரேரணை இன்றைய தினம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதே பொருத்தமானது என அவர் தனது பிரேரணையில் முன்மொழிந்துள்ளார்.

இவ்வாறான நபர்களின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணிலுக்குமில்லை,மஹிந்தவுக்குமில்லை

wpengine

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தையில், அதிகரித்த விலையில் .!

Maash

லக்க்ஷபான நீர்தேக்கத்தின் வான் திறந்து! களனி ஆற்றுபகுதி மக்கள் கவனம்

wpengine