பிரதான செய்திகள்

திவிநெகும நிதி மோசடி! பஷில் மீண்டும் விசாரணை

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை மோசடி செய்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முறைப்பாடு குறித்த சாட்சி குறிப்புகள் உரிய முறையில் பிரதிவாதிகளுக்கு கிடைக்கப் பெறவில்லை என, இதன்போது பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சாட்சி குறிப்புகளை பெற்றுக் கொடுப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வாக்குறுதி அளித்துள்ளார்.

இதற்கமைய, வழக்கு விசாரணை ஜீலை 26ம் திகதி வரை ஒத்திவைக்க, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.ஹெய்யந்துடுவ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

மன்னாரில் 5 எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

wpengine

மீண்டும் மு.காவில் இணைந்த புத்தளம் பாயிஸ்

wpengine

புத்தம் புதிய வசதியுடன் Samsung Galaxy Note 6

wpengine