செய்திகள்பிரதான செய்திகள்

தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா, றிசாட் எம் . பி . மற்றும் மலேசிய தூதுவர் சிறப்பு விருந்தினராக வருகை.!

புத்தளம், தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாட்டம் மற்றும் அல் ஆலிம், அல் ஹாபில் 3வது பட்டமளிப்பு விழா என்பன இன்று (9) அக்கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் பணிப்பாளரும், அதிபருமான தேசமான்ய, தேசகீர்த்தி அஷ்ஷேஹ் அஷ்ரப் முபாறக் (ரஷாதி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான மலேசிய தூதுவர் பாத்லி ஹிசாம் ஆதம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் பிரதம பேச்சாளராக அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி, மௌலானா ஹாபிஸ் ஹாரி எம்.எம்.சுலைமான் ஆலிம் மஹ்லரி ஆகியோர் பிரதம பேச்சாளராகவும் கலந்துகொண்டார்.

அத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.எம்.தாஹிர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு, வெளிநாட்டு உலமாக்கள், கல்விமான்கள் புத்திஜீவிகள், முக்கியஸ்தர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் நினைவு மலர் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் 9 மாணவர்களுக்கு அல் ஆலிம் பட்டமும் 7 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் நகர சபையின் புதிய அலுவலக மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

wpengine

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி அம்பாறையில் போராட்டம்!

Editor

மகிந்தவிடம் வீராப்புக்காட்டவா பாலமுனையில் மேடையமைத்துக் கொடுத்தனர்? ரணிலும், மைத்திரியும் முஸ்லிம்களைப் பற்றி வாய் திறக்காதது ஏன்?

wpengine