பிரதான செய்திகள்

திறப்பு விழாவில் அமைச்சர் றிஷாட்வுடன் பேசிய முன்னால் ஜனாதிபதி

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தினால் கம்பஹா, யக்கல, வெரல்வத்த தொழில்நுட்ப கல்லூரிக்காக 4.64 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள.

புதிய நிர்வாக கட்டிடம், உத்தியோகபூர்வ தங்குமிட வளாகம் மற்றும் கொரிய தொழில்நுட்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட NVQ 5/6 டிப்ளோமா கற்கையின் பயன்பாட்டுக்கு பெறப்படுகின்றன பயிற்சி கூடங்களை மாணவர்களுக்கு உரித்தாக்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, இராஜாங்க அமைச்சர்களான புத்திக பத்திரன, அஜித் மண்ணப்பெரும, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக மற்றும் கொரிய நாட்டு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Editor

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்துதான் பாதாள உலகம் இயங்கியது.

Maash

15 ஆம் திகதி கூடும் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம்

wpengine