திருமணம் முடித்து 5நாட்களில் தற்கொலை

இந்தியாவில் திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியின் மயுர் விகார் பகுதியை சேர்ந்தவர் மஞ்சித். இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதி திருமணம் நடந்தது.


திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதையடுத்து கடந்த 31ஆம் திகதி இரவு தனது அறைக்கு தனியாக ஆர்த்தி தூங்க சென்றார்.


அப்போது மஞ்சித்தும் வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டார்.


காலையில் வெகுநேரம் ஆகியும் ஆர்த்தி அறையை விட்டு வெளியில் வராததால் சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து உள்ளே பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.


காரணம் ஆர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றினார், அப்போது அவர்கள் வீட்டருகில் உள்ள ரயில்வே தண்டவளத்தில் மஞ்சித் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.


விசாரணையில் கணவன், மனைவி இருவருக்குள்ளும் ஏற்பட்ட சண்டையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தாரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.


இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று இருவரின் சடலமாக ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares