பிரதான செய்திகள்

திருகோணமலை திருமண வீட்டில் ரணில்,றிஷாட்,ரவூப்

திருகோணமலை – கிண்ணியாவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூபின் மகளின் திருமண வைபவத்தில் கலந்துக் கொள்வதற்காகவே விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் தலைமையில் இன்றைய தினம் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களும் இத் திருமண வைபவத்தில் பங்கேற்றுள்ளனர்.

இத்திருமண வைபவத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், கபீர் காசிம் உள்ளிட்ட இன்னும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

Related posts

அநீதிக்கு எதிராக களமிறங்குபவர்களை விமர்சிக்கலாமா ? எமது முன்னோர்கள் செய்த தியாகத்தின் விளைவு ?

wpengine

இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த வவுனியா காணி மக்களிடம்

wpengine

அமைச்சு பதவிகளை அப்படியே தருகிறோம்! விக்னேஸ்வரன் பக்கம் வாங்க

wpengine