பிரதான செய்திகள்

திருகோணமலையில் 3 பாடசாலைகளுக்கு பூட்டு!

திருகோணமலை மாவட்டத்தில், கல்விப் பிரிவுகள் சிலவற்றில், பாடசாலைகள் மூன்று திகதி குறிக்கப்படாது மூடப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் கிரிஸ்டி லால் பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.

மஹாஓயா கல்வி வலயத்தில் குடா ஹரஸ்கல வித்தியாலத்தில் மாணவர்களில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளர். அத்துடன், திருகோணமலை அபயபுரம் வித்தியாலயத்தின் அதிபருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானது. அதனையடுத்து அவ்விரு வித்தியாலயங்களும் மூடப்பட்டன.

சீனக்குடா தமிழ் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் மற்றும் ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதியானது அதனையடுத்து அப்பாட​சாலையும் மூடப்பட்டது.

அந்தப் பாடசாலைகளைச் சேர்ந்த ஏனைய மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால், மேற்படி மூன்று பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

2012ஆம் ஆண்டு அமைச்சர் தினேஷ் கொண்டுவந்த திட்டத்தை ஹக்கீம் திறந்து வைத்தார்! றிஷாட் அமைச்சரின் தியாகம் ஹக்கீமுக்கு தெரியுமா?

wpengine

இத்தாலி வரலாற்றில் பெண் முதல் நகர முதல்வர்

wpengine

சூரிச் மாநகரில் “புளொட்” அமைப்பினர் கலந்து கொள்ளும் மாபெரும் மேதின ஊர்வலம்!

wpengine