அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

திசைகாட்டியிடம் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் தப்பிக்க முடியாது – அமைச்சர் சந்திரசேகர்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களால் தப்பிக்க முடியாது. அதற்கமைய, ஊழல்களில் ஈடுபட்ட மோசடியாளர்கள் தற்போது சட்டத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளனர் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த அவர் இவ்வாரு தெரிவித்தார்.

மேலும் அவர் அரசாங்கம் சட்ட விவகாரத்தில் தலையிடுவதில்லை, சட்டம் தனக்குரிய வகையில் தமது கடமையை நிறைவேற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் எனவும், கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளை தவிர ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும் நாட்டு மக்களின் நலன்களுக்காக சிறந்த முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், அரசியல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடே, தமது இலக்கு எனவும் அந்த சமூக மேம்பாட்டு திட்டத்தில் வறுமை நிச்சயம் ஒழிக்கப்படும் என்றார்.

Related posts

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர்கள்

wpengine

அட்டாளைச்சேனை மக்களின் காணியினை பெற்றுக்கொடுத்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

wpengine

அரச நியமனங்கள் கோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில்.

Maash