திங்கள் கிழமை வரை எரிபொருள் வினியோகம் தடை! தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் முன்பதிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்றைய தினம் எரிபொருள் போக்குவரத்து நடைபெறாது எனவும், அதன்படி திங்கட்கிழமை வரை எரிபொருள் போக்குவரத்து நடைபெறாது எனவும் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்ட வாகனங்களைத் தவிர எந்தவொரு பௌசர்களும் செல்லாது எனவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திட்டமிடப்பட்ட எரிபொருள் தாங்கி கப்பல்கள் இலங்கைக்கு வருவது தாமதமாகும் எனவும், அவை இலங்கைக்கு வருவதற்கான திகதியை உறுதிப்படுத்த முடியாது எனவும், எனவே எதிர்வரும் காலங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விடுவிக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares