பிரதான செய்திகள்

திங்கள் கிழமை அமைச்சரவை கூட்டம்! இன்று மாற்றம்.

அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தும் தினத்தில் மாற்றத்தை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதனடிப்படையில், இந்த வாரம் முதல் பிரதி திங்கட்கிழமைகளில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அரச செய்திப் பணிப்பாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.


இதனடிப்படையில் வாரத்தில் திங்கட்கிழமை தோறும் அமைச்சரவையின் கூட்டம் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.


இதனையடுத்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுவரை அமைச்சரவைக் கூட்டம் வாரந்தோறும் புதன் கிழமைகளில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “ஒரு கொலைகாரர்”காட்டிக்கொடுப்பவன்

wpengine

ராஜபக்ஷ அலைபேசி செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளார்.

wpengine

பேஸ்புக் பயன்படுத்தினால் ஆயுள் அதிகரிக்குமென ஆய்வில் தகவல்

wpengine