தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் ஈமானை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கியவரும் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் ஈமானை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு   கடந்த 25 வெள்ளிக்கிழமை மாலை புதிய காத்தான்குடி-01 றிஸ்வி நகரில் இடம்பெற்றது.

மாலை தொடக்கம் இரவு வரை இடம்பெற்ற மேற்படி  இஸ்லாமிய மாநாட்டில் ‘இஸ்லாம் ஓர் தனித்துவமான மார்க்கம்’ எனும்  தலைப்பில் தாருல் அதர் அத்தஅவிய்யா பிரச்சாரகர் அஷ்ஷெய்க் பீ.எம்.அஸ்பர் (பலாஹி)யும் ‘இஸ்லாம் தடை செய்யும் மிகப் பெரும் அநியாயம்’ எனும் தலைப்பில் நிந்தவூரைச் சேர்ந்த அஷ்ஷெய்க் ஏ.ஹாதில் ஹக் (அப்பாஸி)யும் சிறப்புரை நிகழ்த்தினர்.a84d132e-7161-4310-9b87-bd4cb8bfb96e
இங்கு இணைவைப்பு,தர்ஹா வழிபாடு,அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடல்,இஸ்லாம் பெரிய அநியாயமாக கருதும் அநியாயம் என்பன தொடர்பில் விரிவாக உரை நிகழ்த்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த மாநாட்டில் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் அதன் செயலாளர் எம்.எஸ்.எம்.நிஸார் உட்பட ஆண்கள்,பெண்கள்,இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா சமூகத்தில் ஆன்மீக மற்றும் சமூக நல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.73c4d621-dc1a-4376-9b14-411785cd505a

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares