பிரதான செய்திகள்

தாமரை மொட்டு அபார வெற்றியீட்டும் மஹிந்த! இது எமனின் ஆட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலர்மொட்டு அபார வெற்றியீட்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டுக்கு மிகவும் மோசமான நாளாகவே நான் கூறுகின்றேன். எங்களை தோற்கடித்து நாட்டுக்கு தீமை செய்த நாளே இந்த 8ம் திகதியாகும்.

முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை விடவும் இரண்டாவது பிரச்சாரக் கூட்டத்திற்கு அதிகளவான மக்கள் திரண்டிருந்தனர்.

பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிகாரத்தை எமக்குத் தாருங்கள், அவ்வாறு தந்தால் இந்த அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்பதனை நாம் காண்பிக்கின்றோம்.
இதனை நல்லாட்சி என கூற முடியாது, இது யமனின் ஆட்சியாகவே கருதப்பட வேண்டும்.

மொரகஹாகந்த நீர்த் திட்டம் மற்றும் ராஜகிரிய மேம்பாலம் என்பனவற்றை யார் நிர்மானித்தார்கள் என்பதனை இந்த நாடே அறியும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டாரில் மரணித்த மன்னார் முஹம்மது நிஜாஸ் வயது 35

wpengine

இலங்கை புடவை கைத்தொழில் மாநாடு பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாட்

wpengine

நாட்டில் திடீா் விபத்துக்களால் 10000 போ் பலி!

Editor