தாஜூதீன் படுகொலை முன்னாள் பொலிஸ் மா அதிபர் நழுவிக்கொள்ள முடியாது- ரஞ்சன் ராமநாயக்க

றக்பி வீரர் வசிம் தாஜூதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் இவ்விடயம் தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்டிருந்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனும் நழுவிக்கொள்ள முடியாது.

இளங்கக்கோன் இந்த சம்பவம் குறித்த அறிக்கை ஒன்றை பெற்றுக் கொண்டு வாசித்து பின்னர் அதனை திருப்பி அனுப்பி விட்டதாக கேள்விபட்டோம்.

அதாவது உண்மையைத் தெரிந்து கொண்டு அமைதியாக இருந்துள்ளார். கொலையொன்றுக்கு உதவுவது மறைமுகமாக அதனைப் பார்த்து பேசாமல் இருப்பது அல்லது நேரடியாக உதவுவது எல்லமே ஒன்றுதான்.

எனினும் மக்களின் பணத்திலிருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு கொலையைப் பார்த்து விட்டு பார்க்காதது போல் இருப்பது பிழையானதாகவும்.

இவ்வாறான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டுமென ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares