தாஜூதீன் கொலையின் காவல்துறையினை குற்றாளியாக்க கூடாது (விடியோ)

தாஜூதின் கொலை சம்பவத்தின் இறுதி தீர்ப்பில் காவற்துறையினரை குற்றவாளிகளாக சித்தரிக்ககூடாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்திருந்தார்.

அத்துடன் மேலும் தெரிவிக்கையில்”

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை. அனர்த்த முகாமைத்துவத்திற்கு  2135 மில்லியன் ரூபாயும், புனரமைப்பிற்காக 799 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அரசாங்கம் தயார்நிலையில் இல்லாமையும், அரசாங்கத்தின் அலட்சியமுமே இன்று நாட்டில் மிகவும் மோசமான அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உடனடியாக பாதுகாப்பையும், இழப்பீடுகளையும் வழங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டது.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares