தாஜுதீன் கொலை விவகாரம்! அடையாளம் காணப்பட்டுள்ள ஆறு பேரில் மகிந்தவின் சாரதியும்

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் இதுவரை சுமார் ஆறு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மேலதிக நீதிவானின் உத்தரவுக்கு அமைய இவர்கள் அடுத்து வரும் சில நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.

16 சாட்சியங்களின் அடிப்படையிலேயே இந்த ஆறு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவதனூடாக குறித்த கொலை தொடர்பிலான மேலதிக தகவல்கள் மற்றும் கொலைக்கான காரணத்தையும் வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளன.

இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்களாக அடையாலம் காணப்பட்டுள்ள ஆறு பேரில், முன்னாள் ஜனாதிபதியின் சாரதியாக செயற்பட்டவர் என நம்பப்படும் கப்டன் விமலசேன என்பவரும் உள்ளடங்குவதாக தெரியவருகின்றது.

முன்னதாக கடந்த வியாழனன்று வஸீம் தாஜுதீனின் மரணத்தை கொலையென தீர்மானித்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், கொலையுடன் தொடர்புடைய, அக்கொலை தொடர்பில் தகவல்களை மறைத்த அத்தனை பேரையும் 30 நாட்களுக்குள் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

கடந்த 2012ம் ஆண்டு வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டிருந்ததுடன் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இது குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares