பிரதான செய்திகள்

தாஜுதீன் கொலை! ஆனந்த சமரசேகரவை கைதுசெய்ய உத்தரவு

றக்பி வீரர் வசிம் தாஜூதீன் கொலை வழக்கில் சிரேஸ்ட சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைதுசெய்யும் உத்தரவை சீ.ஐ.டி தரப்பினர் கோரியுள்ளனர்.

தாஜூதீனின் கொலை தொடர்பில் பிரேத பரிசோதனையை நடத்திய ஆனந்த சமரசேகர, அது தொடர்பான சாட்சியங்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொலை வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான ஆனந்த சமரசேகரவை கைதுசெய்யும் உத்தரவை நேற்று சீ.ஐ.டி நீதிமன்றில் கோரியது
இதனை கவனத்தில் கொண்ட கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிவான், ஆனந்த சமரசேகரவினால் தமது கைதுக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் அதனையும் கருத்திற்கொண்டு உரிய உத்தரவை வழங்குவதாக அறிவித்தார்.

Related posts

மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபர் கற்களால் தாக்கப்பட்டதால் மரணம் .

Maash

பரீட்சைத் திணைக்களத்தில் இப்தார்! 8 முஸ்லிம் ஊழியர்கள் மட்டும் (படம்)

wpengine

அமீர் அலி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பு

wpengine