கட்டுரைகள்பிரதான செய்திகள்

தவம் அவர்களே !, அன்வர் இஸ்மாயிலை வைத்து அரசியல் செய்யும் தேவையில்லை : றிசாத் உயிருடன் தான் இருக்கிறார். கேட்டறிந்து கொள்ளலாம் –

  • மூதூர் அரூஸ் !

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அண்மையில் நடைபெற்ற வசந்தம் தீர்வு நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் மூதூர் 2002 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் சுற்றிவளைக்கப்பட்ட போது தானும் முன்னாள் அமைச்சர்களான அன்வர் இஸ்மாயில் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் களமிறங்கி மூதுரை பாதுகாத்தோம் என்று கூறினார்.

இது விடயமாக கிழக்கு மாகாணசபை சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம் தன்னுடைய சொந்த முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ரணில் வரும்வரை மூதுரை விட்டு போகமாட்டேன் என்று கூறியதை கூறிவிட்டு அந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த விடயங்களை கூறவில்லை.

அன்று தமிழீழ விடுதலைப்புலிகளினால் மூதூர் சுற்றிவளைக்கப்படவில்லை என்றும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்றும், தமிழீழ விடுதலைப்புலிகளினால் முஸ்லிங்கள் தாக்கப்படவுமில்லை என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தவம் அவர்கள் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரர் தவம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக தவிசாளர் றபீக்கின் மகனுடன் கதைத்ததாக கற்பனையை உருவாக்கி சகல மூதூர் முஸ்லிங்களும் அறிந்த விடயத்தை பொய்யாக காழ்புணர்ச்சியின் உச்சகட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும் அன்வர் இஸ்மாயில் மரணித்து விட்டார். அவரின் பெயரால் ஹரீஸ் எம்.பி அரசியல் செய்கிறார் என அபாண்டத்தை கூறி தவம் தனக்கு மூளைக்குழப்பம் என்பதை பறைசாற்றியுள்ளார். இந்த சம்பவங்களின் போது ஹரீஸ் எம்.பி தன்னுடன் அன்வர் இஸ்மாயில் மட்டுமல்ல றிசாத் பதியுதீனும் இருந்ததாகக்கூறியுள்ளார்.

எனவே தவம் அவர்களே ! நீங்கள் அண்மைக்காலமாக றிசாத் பதியுதீனுடன் நல்ல உறவை கொண்டுள்ள நீங்கள் இந்த விடயத்தை பொய்யென கூறி மறுக்க கோருங்கள் என்பதை சவாலாக முன்வைக்கிறேன். றிசாத் பதியுதீன் கூறட்டும் நீங்கள் பொய்யனா? அல்லது ஹரீஸ் எம்.பி பொய்யனா என்று. அப்போது சமூகம் தெளிவுபெறும்.
நான் மூதூரான் என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகத்திற்கு நான் அறிந்த உண்மைகளை கூறவேண்டிய நிலையில் உள்ளேன்.

2002 இல் சமாதானம் அமுலில் இருந்த காலப்பகுதியில் மூதூரை சேர்ந்த நயீம், ஜாபீர் எனும் இரண்டு இளைஞர்கள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டனர். இந்த நாட்களில் ஜாபீரின் கொலை செய்தியை அறிந்த அவரது தாயார் துக்கத்தில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவங்கள் மூதுரை மட்டுமின்றி ஒட்டுமொத்த இலங்கையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக மக்கள் ஆவேசப்பட்டபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மூதூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து மக்களை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் போரிட ஆயுதங்களை பெற்றுத்தருமாறு கோரி ஆத்திரத்துடன் கத்திக்கொண்டிருந்தார்கள். மக்களை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த தலைவர் ஹக்கீம் இந்த விடயத்திற்கு பொறுப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இங்கு வந்து பொறுப்புக்கூறும்வரை இங்கிருந்து போகப்போவதில்லை என்றார்.

அடுத்தநாள் அவசரமாக சகல உயர்பீட உறுப்பினர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் மூதூருக்கு அழைத்து தவிசாளர் ரபீக்கின் வீட்டில் மாலை நான்கு மணியளவில் உயர்பீட கூட்டத்தை கூட்டி விடயங்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது மாலை 5 மணியளவில் இளைஞர்கள் அவ்விடத்திற்கு ஓடிவந்து பாலத்தோப்பில் பெண்களை விடுதலைப்புலிகள் வெட்டுவதாக கூறினார்கள். கூட்டம் சலசலப்பானது.

மூதூரிலிருந்து சேருவல ஊடாக கந்தளாய்க்கு சென்ற மக்களை பாலத்தோப்பு 58 பகுதி மற்றும் செல்வநகரில் வழிமறித்து வாளால் வெட்டப்பட்டதாகவும் பெண்கள் காயப்பட்ட செய்தியும் உண்மை என்பதை உறுதிப்படுத்தி கொண்டார்கள். இதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆத்திரமடைந்து பாதுகாப்பு அமைச்சருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து விடயங்களை தெரிவித்ததும் இது சமாதான காலம் எங்களால் எதையும் செய்யமுடியாது என்று கூறி கைகளை விரித்து விட்டார்.

கடுமையாக கோபமடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை தொலைபேசி வாயிலாக அழைக்க தலைவரை கோரிநின்றனர். பிரதமர் நோர்வே கண்காணிப்பு குழுஊடாக பேசிவிட்டு பதில் சொல்வதாக கூறி அலட்சியமாக நழுவிவிட்டார். இதனால் பிரதமர் ரணில் மீதும் அவரது அரசாங்கத்தின் மீதும் கடுமையாக ஆத்திரம் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், திடீர் தெளபீக், அன்வர் இஸ்மாயில், றிசாத் போன்றோர்கள் அதிருப்தியை வெளியிட்டு பேசினார்கள்.

ரணிலை நம்பி பிரயோசனமில்லை என்று தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், அன்வர் இஸ்மாயில், றிசாத் போன்றோர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறி முன்வீட்டில் இருந்த நிலையான தொலைபேசி மூலம் ஜனாதிபதியும், முப்படை தலைவியான சந்திரிக்கா அம்மையாரை தொடர்புகொண்டு பேசமுற்பட்டபோது அது கைக்கூடவில்லை. அவரது உதவியாளர்கள் 30 நிமிடங்களின் பின்னர் மீண்டும் அழைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

மூதூர் வீதிகளில் மக்கள் அச்சத்துடனும், பதட்டத்துடனும் உலாவிக்கொண்டிருந்தனர். மீண்டும் ஜனாதிபதியும், முப்படை தலைவியான சந்திரிக்கா அம்மையாரை தொலைபேசியில் அழைத்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், அன்வர் இஸ்மாயில், றிசாத் போன்றோர்கள் மூதூரில் நிலவும் அவசர நிலையை எடுத்துரைத்து பாதுகாப்பை பலப்படுத்துமாறும் அவசரமாக பாதுகாப்பு படையினரை மூதூருக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டனர்.

இது சம்பந்தமாக இராணுவ தளபதியிடம் கலந்துரையாடிவிட்டு பதிலளிப்பதாக ஜனாதிபதி கூறினார். அப்போது மின்சாரத்தை செயலிழக்க செய்துவிட்டு விடுதலை புலிகள் தக்வா நகரில் மக்களின் குடிசைகளை தீயிக்கு இரையாக்கினார்கள். இந்த நேரத்தில் அழைத்த சந்திரிக்கா அம்மையார் விடுதலை புலிகள் மூதுரை தாக்கப்போவதாகவும், பாதுகாப்பு வழங்க மதவாச்சியிலிருந்து படையினரை வரவழைக்க 24 மணித்தியாலயங்கள் எடுக்கும் என்றும் கட்டப்பரிச்சான் முகாமிலிருந்து 70 படையினரை அவசரமாக பாதுகாப்புக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார். அதனை வைத்து அவசரத்திற்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

அரை மணிநேரத்தில் பாதுகாப்பு படைவீரர்கள் கேப்டன் ஒருவரின் தலைமையில் எம்.பிக்கள் இருந்த இடத்தை வந்தடைந்தனர். அந்த நேரத்தில் தக்வா நகரில் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தியதால் அச்சத்தின் காரணமாக வீதிக்கு வந்த பொதுமக்களை பாடசாலைகளில் தங்கவைத்து அவர்களுக்கு வந்திருந்த பாதுகாப்பு படை வீரர்களை கொண்டு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்து கொடுத்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், அன்வர் இஸ்மாயில், றிசாத், திடீர் தெளபீக், சின்ன தெளபீக் ஆகியோர்கள் தங்களின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சகிதம் விடிய விடிய மூளை முடுக்கெல்லாம் அலைந்து திரிந்து அந்த மக்களை பாதுகாத்ததை மூதூர் மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள்.

விடிந்ததும் அடுத்தநாள் சமாதானம் பேச கொழும்பிலிருந்து வந்த பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பனவின் ஹெலியை கட்டப்பரிச்சான் முகாமில் இறங்க விடாமல் வெளியில் நின்ற விடுதலை புலிகள் வானை நோக்கி எச்சரிக்கை வெட்டுக்களை வெடித்தனர். அதனால் பாதுகாப்பு காரணங்களினால் திருகோணமலைக்கு அவர் செல்ல நேரிட்டது. அந்த நேரத்தில் முகாமிலிருந்த தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதுங்கு குழியில் இருந்ததை சகோதரர் தவம் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மு.கா உறுப்பினர் கூட இல்லாத அவர் மாற்று கூடாரத்தில் இருந்துகொண்டு இப்போது பொய்யான கதைகளை அழைக்கிறார்.

வாரக்கணக்கில் மூதூரில் தங்கியதாக அரசியல் காரணங்களுக்காக பொய்யான செய்திகளை கூறுகிறார். அக்கறைப்பற்றை சேர்ந்த தவம் மூதூரில் உறங்க அவர் மூதூரா அல்லது அவரது தாய் தந்தை மூதூரா? பொய்யான செய்திகளை அரசியலுக்காக கூறும் தவத்தின் பொய்யை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இரத்தக்கரையுடன் மூதூர் மக்கள் கஷ்டப்பட்ட போது பாதுகாப்பு வீரர்களை உதவிக்கு அழைத்து விடுதலை புலிகளின் தாக்குதல்களிலிருந்து மக்களை பாதுகாத்த ஹரீஸ், அன்வர் இஸ்மாயில், றிசாத் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி வசைபாடுவதை ஏற்க முடியாது. இது தொடர்பில் அடுத்த தொடரை விரைவில் எழுதவுள்ளேன்.

பாதுகாப்பு அமைச்சர் சந்திரிக்கா என்று ஹரீஸ் எம்.பி எங்கும் கூறவில்லை. பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன என்பது அறியாதவறல்ல ஹரீஸ் எம்.பி. அவர் சந்திரிக்கா அம்மையாருடன் பேசியதாகத்தான் கூறியுள்ளார். அவர்தான் அப்போது முப்படை தளபதி. அவர் நியமித்தனர் தான் இராணுவ தளபதி. அவருடன் பேசித்தான் பாதுகாப்பு படையை வரவழைத்த விடயம் நீங்கள் சமீபத்தைய நாட்களில் நல்ல உறவுடன் இருக்கும் றிசாத் பதியுதீனுக்கும் தெரியும். சமுகத்தின் தலைவர்களில் ஒருவரான அவர் அந்த நடுநிசியில் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்தார். அன்வர் இஸ்மாயில் கப்ருக்குள் உள்ளதை போன்றில்லாமல் அவர் உயிருடன்தான் இருக்கிறார். உங்களால் முடிந்தால் றிசாத் பதியுதீனிடம் கேட்டு இந்த சம்பவங்கள் பொய்யானவை என்று கூற சொல்லுங்கள். மூதூரானாகிய நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். அந்த சம்பவம் உண்மை என்று நிரூபணமாகின்ற போது அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள். பொய்யர்கள் சமூகத்தை வழிநடத்த தகுதியற்றவர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அந்த இறைவசனம் உங்களுக்கு பொறுத்மானதாக உள்ளது.

எம். ஐ. அரூஸ்
பிரச்சார செயலாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மத்திய குழு – மூதூர்
(நெய்தல் நகர் – 01, மூதூர்)

Related posts

குடி நீர் பிரச்சினையினை தீர்த்து வைக்க எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உதவி

wpengine

“புளுவேல்” விளையாட்டில் 11ஆண்டு மாணவன் நேற்று தற்கொலை

wpengine

மீராவோடை வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி வழங்கி வைப்பு

wpengine