செய்திகள்பிரதான செய்திகள்

தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட சிறந்த மனிதர்களை உருவாக்குவதே தமது பிரதான இலக்கு – பிரதமர்.

”உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம் பரந்த மனமுடைய, சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே தமது இலக்காகும்” என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ‘புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து அனைவரும் பெரும் அக்கறை கொண்டிருப்பது சமூகத்தில் ஏற்பட்டுள்ள உரையாடல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது எனவும், கல்விச் சீர்திருத்தம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ” அபிவிருத்தி இலக்குகளை அடைவதை மாத்திரம் இந்த சமூகம் எதிர்பார்க்கவில்லை எனவும் கல்வியிலும் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் ”உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம்‘ பரந்த மனமுடைய, சுதந்திர சிந்தனையுடைய, உலகத்தை பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடிய, தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட சிறந்த மனிதர்களை உருவாக்குவதே தமது பிரதான இலக்காகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம்குடியிருப்புக்கள் தவறாகவே உள்ளடக்கப்பட்டுவிட்டன ஜனாதிபதியிடம் கையழித்த

wpengine

15 வயது சிறுமி 17 நாட்கள் தடுத்து வைத்து துஸ்பிரயோகம்! யாழில் சம்பவம்.

Maash

கல்முனை மாநகரத்தை துண்டாடும் தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

wpengine