பிரதான செய்திகள்

தலைமன்னாரில் பாரியளவு கேரளாக் கஞ்சாப் மீட்பு! சந்தேக நபர் ஒருவர் கைது

தலைமன்னார் மேற்கு சிலுவை நகர் பகுதியில் 32 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் விசேட அதிரடிப்படையினரும், தலைமன்னார் பொலிசாரும் இணைந்து நேற்று மாலை மேற்கொண்ட தோடுதல் நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாப்பொதிகள் சுமார் 32 இலட்சம் பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மீட்கப்பட்ட 32 கிலோ கஞ்சாப்பொதிகள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதேச மட்ட இலவச WiFi வலையம் விரைவில்

wpengine

இஸ்லாமிய பெண்களுக்கு ஏனையோர் போன்று சம உரிமை வேண்டும்-WAN

wpengine

Good Vibes Bot ஊடாக $5 Viber Out credit களை மாதமும் வெற்றியீட்ட முடியும்.

wpengine