தலைமன்னாரில் கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்பு: ஒருவர் கைது

(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

இந்தியாவில் இருந்து தலைமன்னார் பகுதிக்கு கடத்திவரப்பட்ட  8 கிலோ 320 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று திங்கட்கிழமை காலை கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் கிராமம் ஊர் மனைப்பகுதியைச் சேர்ந்த  குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட  விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, தலைமன்னார் கிராமம் ஊர் மனைப்பகுதிக்குச் சென்ற மன்னார் மாவட்ட  விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், தலைமன்னார் கடற்படையினரின் உதவியுடன் குறித்த கஞ்சாப்பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் சுமார் 8 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதி வாய்ந்தவை என தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares