அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

தமிழ் மொழி பதில் : ஆளும் தரப்பு mpக்கள் இனவாதம் பேசுவதாக அப்புஹாமி குற்றச்சாட்டு.

ஆளும் கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் முகப்புத்தகத்தில் தமிழ் மக்களிடையே இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றனர். அதற்கு இடமளிக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, சபாநாயகரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தே ஹெக்டர் ஹப்புஹாமி இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழில் அமைச்சரிடம் கடந்த முறை கேள்வியெழுப்பிய போது அவர் தமிழ் மொழியிலே பதில் அளித்தார்.

நாங்கள் தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் மதிப்பவர்கள். என்றாலும் இந்த சம்பவத்தின் போது, அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்ததை நாங்கள் தவறான முறையில் கண்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழ் மொழி தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதனை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால் அமைச்சரும் அவருடன் இருக்கும் மேலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் எனது புகைப்படத்தையும் பயன்படுத்தி அவர்களின் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளனர்.

நடக்காத ஒன்றை சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் படத்துடன் அவ்வாறு முகப்புத்தகத்தில் குறிப்பிட்டு தமிழ் மக்களிடையே கொண்டு செல்லும்போது அங்கே இனவாதமே உருவாகும். அவ்வாறான விடயங்கள் மூலமே இனவாத பிரச்சினைகள் ஆரம்பமாகும். அதனால் இதற்கு இடமளிக்கக்கூடாது என்றார்.

Related posts

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி..!

wpengine

நீர்கொழும்பு மாணவி முதலாமிடம்

wpengine

மீண்டும் றிஷாட்டின் கட்சியில் இணைந்த முன்னால் தவிசாளர்

wpengine