தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது தமிழ் கட்சிகளோ எதையும் செய்யவில்லை

அந்த மாற்றத்தை இவ்வளவு காலமும் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது தமிழ் கட்சிகளோ செய்யவில்லை. அவர்கள் இங்கு இருந்தும் கூட இந்த மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை.


அந்தவகையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய எமது கட்சி வன்னி மாவட்டத்தில் கேணல் ரட்ணபிரிய பந்துவிற்கு முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளோம்.


அதேபோல் கொழும்பு மாவட்டத்தில் எங்களால் உருவாக்கப்பட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தால் எந்த பிரயோசனமும் இல்லை.
அதனால் விமல் வீரவன்ச, சுசில் பிரேமஜந்த மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகியோரை ஆதரிப்பதற்கு எமது கட்சி முடிவெடுத்துள்ளது.


ரட்ணபிரிய பந்து இராணுவ வீரராக இருந்து கொண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்கள் மனதில் பாரியதொரு இடம்பிடித்துள்ளார்.


பல ஆயிரம் போராளிகளை விடுதலை செய்தும், சமூகமயமாக்கியும், வேலைவாய்ப்பு வழங்கியும் இருண்ட யுகத்தில் ஒளியேற்றி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.


பல இராணுவ தளபதிகள் இருந்தாலும் ரட்ணபிரிய பந்து வன்னி மாவட்டத்தில் உள்ள மக்களது ஆதரவினை பெற்றுள்ளார். அவரது வெற்றியில் சிறுபான்மை மக்களாகிய நாமும் பங்காளியாக வேண்டும்.


வன்னியில் இவர் அமைச்சராகி இவர் மூலம் மீண்டும் ஒளியேற்ற முடியும். இன்று பலர் கொழும்பில் இருந்து தேர்தலுக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்கள்.
அண்ணன் ஒரு கட்சியும், தம்பி ஒரு கட்சியுமாக நிற்கின்றார்கள். மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் இங்கு வெற்றி பெற்றாலும் கூட கொழும்பிற்கு ஓடி விடுவார்கள்.


அதில் மக்கள் தெளிவாக வேண்டும். பொதுஜன பெரமுன கட்சிக்கு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார். இந்த தேர்தலில் வன்னியில் மாற்றம் ஏற்பட வேண்டும்.


தமிழர்களுக்கு வாக்களித்த காலம் போதும். பெரும்பான்மை இனத்தவரோடு சேர்ந்து எமது அபிவிருத்தியையும், உரிமையையும் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதனை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares