பிரதான செய்திகள்

தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். கொலை செய்து கடலில் போட்டனர்.

கடத்திய மாணவர்கள் கொலை செய்யப்பட்டு கடலில் போடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றித்தில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவருடன் நெருக்கமானோருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கேட்ட குற்றச்சாட்டாகும்.

இதில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். இவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியானதும் அவர்களை கொலை செய்து கடலில் போட்டனர்.

இவர்களின் பெற்றோரின் நிலைமை தொடர்பான தகவல்கள் வெளியானதும் அவர்களை கொலை செய்து கடலில் போட்டனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மைத்திரியின் வீடு ,செயலகம் முற்றுகை

wpengine

வர்த்தகமானி அறிவித்தல் வெளிவந்தால் 19ஆம் திகதி தேர்தல் மஹிந்த

wpengine

மன்னாரில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தில் பன்றி இறைச்சி

wpengine