பிரதான செய்திகள்

தமிழ் அரசியல் கட்சிகள், குழுக்கள் பிரிவினைவாத, இனவாத கொள்கைகளை கைவிட வேண்டும்.

நாட்டில் நல்லிணக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு  கிடைக்க வேண்டுமாயின் முதலில் தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது பிரிவினைவாத இனவாத கொள்கைகளையும் சமஷ்டி கோரிக்கையையும் கைவிட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

தமிழர் தரப்பு கிடைக்காத ஒரு சமஷ்டி முறைமையினை எதிர்பார்த்து செயற்பட்டுவருகின்றது. எனினும் இலங்கையில் ஒருபோதும் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகவே சமஷ்டியை உடனடியாக கைவிட்டு ஒன்றிணைந்து எதிர்கால ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகார பகிர்வு தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச பிரதிநிதிகளிடம் வலியுறுத்திவரும் நிலையில்  இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டை வினவியபோதே கட்சியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

முஸ்லீம் அகதிகளின் காலைக் கழுவிய போப் (வீடியோ இணைப்பு)

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு! ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அநுராதபுர பாடசாலைக்கு நிதி ஓதிக்கீடு

wpengine