கட்டுரைகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தமிழ்,முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து சில ஏஜென்டு!

-ரிம்சி ஜலீல்-

இலங்கை வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரைக்கும் அரசியலுக்கான அடித்தளம் இனவாதம் துரோகம் உரிமைகளைப் பறித்தல் என்பன அரங்கேறாத நாட்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும் அதனால் என்னவோ அரசியலை சாக்கடை என்றே பலர் சொல்வார்கள்.

கடந்த சுதந்திர தினத்தில் கூட மூவின மக்களும் சேர்ந்து பெற்ற சுதந்திரத்தின் சுதந்திர கீதத்தை இரண்டு இனங்களைப் புறந்தள்ளிவிட்டு சிங்கள மொழியில் மாத்திரம் ஒளிபரப்பியது இந்த நாட்டின் மற்றைய இனத்தவர்களுக்கான அடிப்படை உரிமையை மீறும் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுவதுடன் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அவர்களின் மத மொழி அடையாளங்களை ஆரம்பமாக அளிக்க வேண்டும் என்கின்ற கோட்பாடு இங்கு பின்பற்றப்பட்டுள்ளதா என்கின்ற சந்தேகம் இன்றுவரை எழுந்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்த நிலையில் கடந்தகால வரலாற்றோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் அவரின் சுயநலத்திற்காக செய்த எத்தனையோ விடயங்கள் இன்றைய அரசியல் பரப்பில் சாக்கடையை மிஞ்சி விடுமோ என்ற அளவுக்கு அன்று இன்றும் பேசப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் அவரின் துரோகத்துக்கு கிடைத்த ஒரு சன்மானமாகவே பார்க்கப்படுகின்றது எது எப்படியோ இன்னும் ஒரு சில மாதங்களில் இலங்கை வரலாறு மீண்டும் ஒருமுறை நீண்ட காலத்துக்கு பேசப் போகின்ற பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றது.

இந்த நிலையில் அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொள்வதற்காக பலர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் எல்லாக் கட்சிகளிலும் அதற்கான வேலைகள் கட்சிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவின் படி சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் மாத்திரம் தான் நாம் வெற்றி பெற்றோம் என்று மார்தட்டி திரிந்தவர்கள் அவர்களினால் 105 அல்லது 107 ஆசனங்களை மாத்திரமே பெறமுடியும் என்பதனை அறிந்து கொண்டவர்கள் தற்போது மூன்றில் இரண்டு என்ற இலக்கை சிங்களப் பெரும்பான்மை பேரினவாதிகள் அடைந்து கொள்வதற்காக தமிழ் முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து சில ஏஜென்டுகளை ஏவிவிடும் வேலையை கச்சிதமாக ஆரம்பித்து வைத்துள்ளது.

இந்துக்களிடம் ஒரு நடைமுறை உள்ளது தமது கடவுளுக்கு ஆட்டை பலி கொடுக்க முன்னர் அந்த ஆட்டிடம் உன்னை பலிகொடுக்க அனுமதிக்கிறாயா என்று கேட்டுவிட்டு தான் ஆட்டின் கழுத்தை வெட்டுவார்கள் இந்த நடைமுறைதான் இன்று இலங்கை அரசியலிலும் கச்சிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது பணத்தை கொடுத்து ஏஜென்டுகளை விலைக்கு வாங்கி அல்லது பணம் படைத்த செல்வந்தர்களை தத்தமது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான களங்களை அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்து உன்னுடைய சமூகத்தை அழிப்பதற்கு நீ ஒத்துக் கொள்கிறாயா என்பதனை சூசகமாக கேட்டுவிட்டு தத்தமது அடைவுகளை அடைந்ததும் முழுமையாக பழி கொடுப்பதற்கான வேலைகளை இன்றைய அரசு சிறப்பாக செய்து வருகிறது.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களினாலும் வெற்றி பெற முடியாது என்பதனை அறிந்திருந்தும் பணத்திற்காகவும் சில சொகுசு வாழ்க்கைக்காகவும் முஸ்லிம் சமூகத்தை அடகு வைக்கின்ற இத்தகைய செயற்பாடானது மீண்டும் ஒருமுறை சிங்கள பெரும்பான்மை வாக்குகளினால் தான் அரசாங்கம் ஒன்றை அமைத்தோம் என்று மீண்டும் ஒரு முறை சொல்வது போன்றுள்ளது.

சிறுபான்மை கட்சிகளும் சிறுபான்மை தலைவர்களும் குறிக்கப்படுகின்ற இத்தருணத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப்பின் ஊடாக ஒரு காணொளி எனது செவிகளை எட்டியது தௌபீக் மதனி என்பவர் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்களை பணத்தின் பக்கம் திசை திருப்புகிற ஒரு செய்தியை சொல்லியிருந்தார் மார்க்கத்தைக் கற்றுத் தேர்ந்தவர்கள் இத்தகைய செயற்பாடுகளுக்கு துணை போவது கடந்த கால பர்மாவை திரும்பிப் பார்ப்பது போன்று எண்ணத் தோன்றியது.

பலஸ்தீனத்தில் அன்று யூதர்கள் விதைத்த விதைகள் போன்று அண்மையில் பர்மாவில் பேரினவாதிகள் தீட்டிய திட்டங்களை போன்றும் எதிர்கால இலங்கை மாறுமா என்கின்ற சந்தேகம் இன்றுவரை தொடர்கின்றது.

தேர்தலின் பின்னர் பெரும்பான்மையான சிங்கள வாக்குகளால் அரசாங்கமொன்று அமைக்கப்படுகின்ற போது இலங்கை முஸ்லிம்களின் நிலை எத்துணை துயரங்களை சந்திக்க இருக்கின்றது என்ற கேள்விகளை நாம் எப்பொழுதும் நமக்குள்ளே கேட்டுக் கொள்வோம்.

Related posts

நிவாரணம் தொடர்பில் மஸ்ஜித் சம்மேளன நிர்வாகிகளுடன் அமைச்சர் றிசாட் சந்திப்பு

wpengine

நீதவானின் கடும் எச்சரிக்கை! ஞானசார தேரருக்கு பிணை

wpengine

நிந்தவூரில் இப்ராஹிம் தற்கொலை

wpengine