தமிழ்,முஸ்லிம் இனவாதம் பேசியதற்காக வன்னி பாராளுமன்ற உறுப்பினருக்கு கௌரவ பட்டம்

எட்டாவது நாடாளுமன்றத்தின் வன்னி மாவட்டத்தில் முதற் தர நாடாளுமன்ற உறுப்பினராக சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை அவதானிக்கும் மந்திரி எனும் சுயாதீன அமைப்பு சுட்டிக் காட்டி உள்ளது.


மேலும் அவ் அமைப்பு கடந்த நான்கரை வருடங்களில் தமிழர்களின் நிரந்தர தீர்வு விடயமாகவும் வன்னி மாவட்டத்தில் தமிழர்களின் தனித்துவத்தை அழிப்பதற்கான சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் அதிக நேரம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டமைக்காகவும் அவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


மேலும், அதிகமான நேரம் நாடாளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்தி தமிழர்களின் கலை கலாச்சாரத்தை பாதுகாத்ததுடன் மாவட்டங்கள் மற்றும் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் அதிகமாக நாடாளுமன்றத்தை பயன்படுத்தியமைக்காகவும் சார்ள்ஸ் நிர்மலநாதனை கெளரவித்து வன்னி மாவட்டத்தின் முதற் தர நாடாளுமன்ற உறுப்பினர் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.


இதற்காக வன்னி மக்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares