தமிழில் தேசிய கீதம்;அரசியலமைப்புக்கு முரணானது உயர் நீதிமன்றத்தில் மனு

68 ஆவது சுதந்திர தின தேசிய வைபவத்தின் போது தேசிய கீதம் தமிழ்மொழியில் பாடப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய கீதம் தமிழ்மொழியில் பாடப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அவ்வாறு பாடப்பட்டமையால் அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி  மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

களனி கல்பொருள்ளயை வதிவிடமாகக்கொண்ட சன்ஜீய சுதன் பெரேரா, பேலியகொடையை வதிவிடமாகக் கொண்ட பிரதீப் ஆசிரி சொய்சா மற்றும் களனியை வதிவிடமாகக்கொண்ட தொன் பிரேமரத்ன ஆகியோரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares