பிரதான செய்திகள்

தமிழர்களுக்கு கட்டாயம் பிரதேசசபையை கொடுக்க வேண்டும்

தமிழர்களுக்கு கட்டாயம் பிரதேசசபையை கொடுக்க வேண்டும் எனவும், அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.


அம்பாறை – அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று மதியம் மாற்று கட்சிகளை சேர்ந்த ஆதரவாளர்கள் உத்தியோகபூர்வமாக தேசிய காங்கிரஸில் இணையும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.


இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,


கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்தையும், சாய்ந்தமருதுக்கு நகரசபை கிடைக்க வேண்டும் என்ற விடயத்தையும் தமிழ் சகோதரர்களும், முஸ்லிம் சகோதரர்களும், தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய சிங்கள அரசியல் பிரமுகர்களும் அலரி மாளிகையில் கூறியிருந்தோம்.


தமிழர்களுக்கு தேவையானது உள்ளூராட்சிசபை. அது ஏற்கனவே இருந்திருக்கிறது. சாய்ந்தமருது விடயத்தில் அங்கு எல்லைப் பிரச்சினை இருக்கவில்லை. எல்லை பிரச்சினை இருப்பது 3 சபைகள் உள்ள இடத்தில்.
இந்த மூன்று சபைகளுக்குமான எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் போதும் 4 பிரதேச செயலகங்கள் உருவாகும் என்று அந்த கருத்தினை அங்கு எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.


தமிழர்களுக்கு கட்டாயம் பிரதேசசபை கொடுக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெளிநாடுகளுக்கு செல்லும் அரச ஊழியர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை அனுப்ப வேண்டும்.

wpengine

ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடக விருது

wpengine

அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது அல்லி ராணி கோட்டை

wpengine