மன்னார்

‘தமிழரசுக் கட்சிக்குள் ஒரு சில கோமாளிகள்’ சாணக்கியன்

இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் ஒரு சில கோமாளிகள் ஊடகங்களை வைத்து கட்சிக்குள் பிரச்சினைகள் இருப்பது போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்த முனைவதாக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் நேற்று(29.12.2024) இடம்பெற்ற இரத்ததான முகாமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை தமிழரசுக்கட்சியானது பழமைவாய்ந்த கட்சியாகும்.கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவு பவளவிழாவினை நடாத்தும் பொறுப்பும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தரப்பட்டிருக்கின்றது.

75ஆவது ஆண்டை நிறைவுசெய்துள்ள ஒரு பழம்பெரும் கட்சிக்கான கோட்பாடுகள், கட்டுப்பாடுகள், நடைமுறைகள் உள்ள கட்சியாகும். தமிழரசுக் கட்சிக்குள் தொடர்ந்து குழப்பம் இல்லை. ஒரு சில கோமாளிகள் தாங்கள் விரும்பிய விடயத்தை ஊடகத்தில் கூற விரும்பினால் எவரையாவது அழைத்து பேட்டி கொடுக்கின்றனர்.

இவர்கள் யாரென்றால் கட்சியில் உருப்படியான எந்தப் பதவியும் இல்லாதவர்கள். கட்சி சம்பந்தமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்க முடியாதவர்கள்.

ஆனால், ஊடகங்கள் ஒருசில கோமாளிகளை வைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சிக்குள் குழப்பங்கள் இருப்பதாக சமூகவலைத்தளங்கள், யூடியூப் கணக்குகளில் போலியான செய்திகளை வெளியிடுகின்றனர்” என்றுள்ளார்.

Related posts

பள்ளி முனை மக்களின் காணிகளை அவர்களிடமே பகிர்ந்தளிக்க வேண்டும்.

Maash

மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர்கள் 7 பேருக்கும் 24ஆம் திகதி வரை மறியலில்.!

Maash

மன்னார் மூர்வீதி பகுதியில் பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் தயாரிப்பு .

Maash