அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

தபால் மூல வாக்களிப்பினை மேற்பார்வை செய்யும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் கலந்துரையாடல்!

நடைபெறவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பினை மேற்பார்வை செய்யும் அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் கலந்துரையாடல் இன்றைய தினம்(11) முல்லைத்தீவு மாவட்ட செயல பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திருமதி. சசிகுமார் சிந்துஜா அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றதுடன் அஞ்சல் மூல வாக்களிப்பில் மேற்பார்வை செய்யவுள்ள அலுவலகர்களுக்கான தெளிவூட்டலை வழங்கினார்.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகருமான திரு.எஸ்.குணபாலன் அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாவட்ட ஊடகப்பிரிவு

மாவட்ட செயலகம்

முல்லைத்தீவு

Related posts

யாழ் – கொழும்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

Editor

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அமைச்சர் றிஷாட்டின் அணியுடன் இணைவு

wpengine

கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த 50 குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவ முன்வாருங்கள்

wpengine