பிரதான செய்திகள்

தன்னை தானே சுட்டுக்கொலை! ராஜிதவிடம் வாக்குமூலம்

தன்னை கடத்திச் சென்று தாக்கி சிப் (CHIP) ஒன்றை கேட்டதாக ஊடகவியலாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாடு முற்றிலும் பொய்யானது என நீண்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் வீட்டில் இருந்த மேசன் கரண்டியால் தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பெயர் குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் சதுர சேனாரத்ன ஆகியோரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்க தரிசனம் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பு

wpengine

வடக்கில் மீண்டும் புலிகளின் ஆதிக்கம் தேரர்

wpengine

ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் இல்லை

wpengine